இரண்டு பெண்கள் பேசிக்கொண்டது.
இடம்: சிட்னியின் மேற்குப்பக்க புறநகர் ஒன்று
"ஐசே நான் உங்களை எங்கையோ பாத்திருக்கிறன்..... நீங்கள் லேடீஸ் கொலிஜ்'சே?"
"ஓம், நான் 92 ஏ/எல் பாட்ச், நீங்கள்?"
"நான் 93!"
"எப்படி இருக்கிறீயள்"
"------"
...
"------"
கதை ஒரு பத்து நிமிசம் உப்புச் சப்பில்லாமல் போகுது. பிறகு
"ஐசே, உங்கடை மனிசன்ர பேரென்ன?"
"பாலகோபால்"
"ஓ, உயரமா சிவலையா இருப்பாரே?
இரண்டாவது பெண் கொஞ்சம் அசௌகரியமாகிறார். "ம்ம்ம்"
"உத்துப் பாத்தா கமலின்ரை சாயலடிக்கும்.."
"அப்படித்தான் அவர் நினைக்கிறார், உங்களுக்கு எப்படி அவரைத் தெரியும்?" என்றார் உடனே
"நான் கம்பசிலை அவருக்கு ஜூனியர்"
"ம்ம்ம் நான் வேறை கம்பஸ்!?"
"கோபால் நல்ல முசுப்பாத்தி. கடி ஜோக் நெடுகச் சொல்லி எல்லாரையும் சிரிக்கவைப்பார்."
"ம்ம்ம்"
"ஆனாப் பாருங்கோ அவர் கொஞ்சம் 'லெவல்' பேர்வழி, அவர் மாதிரி இருந்தால் கொஞ்சம் லெவல் வரும்தானே?"
"ம்ம்ம்"
"அது சரி இப்பவும் அவர் ஷூ'வை நல்லா மினுக்கித்தான் போடுறவரே? அப்ப அவர் ஷூ'வைப் பள பள எண்டு கண்ணாடி மாதிரிதான் வைச்சிருப்பார்"
கொஞ்சம் எரிச்சலோடு, "ஆருக்கு இதையெல்லாம் கவனிக்க நேரம் வருது..."
"சரி ஐசே, நானொருக்கா என்ரை மனிசனையும் கூட்டிக் கொண்டு உங்கடை வீட்டுக்கு வாறன்.கோபாலின்ரை கடி ஜோக்'குகளைக் கேட்டுக் கனகாலம் ஆச்சு, எப்ப ப்ரீ'யா நிப்பியள்?"
"இப்ப எங்களுக்கு நேரமில்லைப் பாருங்கோ, பெடியனுக்கு எக்ஸாம் வருது, பிறகு நேரம் வரேக்கை பாப்பம்...இப்ப நேரம் போயிட்டுது, நான் வரட்டே"
-----
பாலகோபாலுக்கு அட்வைஸ் :"ஆம்பிளை வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா!"
தலைப்பை பார்த்து ஓடி வந்தேன்.
ReplyDeleteநல்லவேளை அவர் எங்க கோபால் இல்லை:-)))))
பாலகோபாலுக்கு அட்வைஸ் :"ஆம்பிளை வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா!"//
ReplyDeleteநல்ல பயனுள்ள்ள அட்வை ஸ்
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Nice...
ReplyDeleteநொந்த வேலிட அனுபவம் போல
நன்றிகள் துளசி கோபால்,Ramani,& Anonymous.
ReplyDeleteAnonymous
நம்புங்கோ, இது நான் கேட்டதுதான்
//
ReplyDelete"இப்ப எங்களுக்கு நேரமில்லைப் பாருங்கோ, பெடியனுக்கு எக்ஸாம் வருது, பிறகு நேரம் வரேக்கை பாப்பம்...இப்ப நேரம் போயிட்டுது, நான் வரட்டே"
//
கோபாலின்ரை கொன்ராக்ற் நம்பரைத் தந்திற்றுப் போங்கோ....
கோபால் நொந்து நூடூல்ஸ் ஆக இருப்பார். (ஒரு ஊகம்தான்). மற்றும்படிக்கு அவரின் contact details காதில் விழல்லை.
Delete//
Deleteகோபாலின்ரை கொன்ராக்ற் நம்பரைத் தந்திற்றுப் போங்கோ....
//
இது கோபாலின்ரை ஜுனியர் பெட்டை (A/L 93), அவரின்ரை மனிசியிட்டக் கேட்டதுங்கோ :-)
உங்களிட்டை நாங்க சுகந்தியின்ரை கொன்ராக்ற் நம்பர்தான் கேப்பம். ஆனா இப்பையில்லை. அவாவைப்பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சாப்பிறகு :-)
>கோபாலின்ரை கொன்ராக்ற் நம்பரைத் தந்திற்றுப் போங்கோ....
Deleteஉடன் தொடர்வது குடும்பி பிடிச் சண்டை!
யானை நின்றாலும் பொன் இருந்தாலும் பொன் என்று சொல்லுவாங்கள்! உண்மை போல தான் கிடக்கு!
ReplyDelete