Sunday, April 8, 2012

கலைமகள் தேநீர்ச்சாலை

- இது தமிழ் உயிர் எழுத்துக்களில், நான்காமெழுத்தாகும். ஈ என்ற எழுத்திற் தொடங்கும் திருக்குறள்கள் எட்டு உண்டு. ஈ என்பது 'அசுத்தமான இடங்களில் இருக்கின்ற ஒருவகைப் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு" என்பவற்றில் ஒன்றைக் குறிக்கும் என்று தமிழ் விக்சனறி கூறுகிறது. ஈ என்பது இலங்கைப் பேச்சு வழக்கில் இலையான் எனப்படும். தமிழ்நாட்டிலும் 'இலையான்' என்ற சொல் பாவனையில் உண்டா என அறிந்தவர்கள் கூறவும்.

மதிப்புக்குரிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஐயாவிற்கு எங்கு ஈயோட்ட வேண்டிய தேவை இருந்ததோ தெரியவில்லை.

"அப்பொழுது பார்த்து ஜிவ்வென்று இலையான் ஒன்று பறந்து வந்து அவளையே சுற்றியது. தானாகவே பிரகாசம் வீசும் பச்சை இலையான். உருண்டைக் கண்கள். தோள் மூட்டில் இருக்க முயற்சித்த போது உதறினாள். நான் பொறுக்க முடியாமல் கையை வீசினேன். .."

என்று "மஹாராஜாவின் ரயில் வண்டி" சிறுகதையில் எழுதுகிறார்.

அ.மு. ஐயாவின் நுணுக்கமான அவதானிப்புக்களுக்கும் வர்ணனைகளுக்கும் நிறைய ரசிகர்கள். ஆனால் "கலைமகள் தேநீர்ச்சாலை" உரிமையாளர் திருவடிவேல் ஈககளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது தானும் 'ஈ' விடயத்திலாவது அ.மு ஐயா மாதிரி நுணுக்கமான அவதானிப்புள்ளவர் என்று சிலாகித்துக் கொண்டார்.
காலை 11 மணி. கடைதிறந்த நேரத்தில் இருந்து தனியாக 'ரீ' ஆத்தி ஆத்தித் தோள்மூட்டுக்களில் வலி. கடைவாசலில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு, 'எனக்கு கஸ்டமர்களின் எண்ணிக்கை முக்கியமில்லை, தரம் தெரிந்த வாடிக்கையாளர்தான் முக்கியம்' என்று மனதிற்குள் பீலா விட்டுக் கொண்டிருந்தார்.

தூரத்தில் யாரோ மூவர் வருவது தெரிந்தது. 'யாரோ வழிதவறிய அப்பாவிகள் வருகிறார்கள் போல... ' என்று யோசித்துக்கொண்டார்.

கேஜே: அண்ணே மூண்டு காப்பி போடுங்க.

திரு: தம்பி வாங்கோ வாங்கோ.., ஊர் எது? உங்கடை மொழிதான் கொஞ்சம் இடிக்குது. இதேன் இந்தத் தொப்பியைப் பின்பக்கமாகப் போட்டிருக்கிறீர்?

கேஜே: (மனதிற்குள் 'ஒரு ரீ குடிக்க வந்தால் ஒரே இம்சை, இந்த ஆள் ஈயோட்டுவதற்கு இதுதான் காரணம், காப்பியோ கோப்பியோ கேட்டால் தரவேண்டியதுதானே?') ரவுண் பக்கந்தான். எங்கடை வீட்டில 'காப்பி' எண்டுதான் சொல்லுவம். கோப்பி என்று சொல்லுறதில்லை.

கேதீஸ்: அண்ணை, கேஜே சொல்லுறது சரி.

திரு: தம்பிமார், கடை போ(ர்)ட்டை வடிவாகப் பாருங்கோ.

எல்லோரும் குழம்பிப்போய் இருக்க, வாலி வாயைத் திறக்கிறார். "கலைமகள் தேநீர்ச்சாலை" நல்ல வடிவான பெயர். நான் "தேநீர்ச்சாலை" எண்டு ஒரு கவிதையே எழுதியிருக்கிறன்.

திரு:ஆங், நான் கடை போ(ர்)ட்டிலை இருக்கிறமாதிரி தேத்தண்ணி மட்டும்தான் போடுவன். மூண்டு ரீ போடட்டே? இல்லாட்டி 'கிரூபன் காப்பி/டீ ஸ்டால்' தான் போகோணும்.

வாலி: (வேண்டாவெறுப்பாக) "சரி, சரி போடுங்கோ.."

கேஜே: அண்ணே சொல்லுறன் எண்டு குறை நினைக்காதேங்கோ, 'ரீ, மசாலா ரீ, சாயா, காப்பி, கப்புச்சினோ, லாற்றே' எண்டு வகை வகையாக மார்(க்)கற் பண்ணினால்தான் ஆக்கள் வருவினம்.

வாலி: ரீ போடுவது ஒரு தவம். அதுக்கொரு டெடிக்கேஷன் வேணும்.

கேஜே: இது விசர்க்கதை, 'ஜஸ்ட் லைக்' போடுவதுதான் ரீ. அதுக்கொரு கைமணம் வேணும், அது பிறவியிலைதான் வரும்.

வாலி: பிறவித் திறமை உள்ளவனும் தவம் மாதிரி டெடிக்கேஷன் உடன் ஊத்தினால் வருவது தேவலோகத்துத் தேநீர்! நான் ஒரு கவிதை ....

திரு: மன்னிக்கோணும், எனக்குக் கவிதை விளங்காது.

வாலி: அண்ணே பொய் சொல்லுறியள், ரீ போடுற உங்களுக்கு கவிதை விளங்காதா?

கேதீஸ்: அண்ணை, கேஜே சொல்லுறது சரி; 'ஜஸ்ட் லைக்' போடுவதுதான் ரீ

திரு: (மனதிற்குள், இவங்கள் என்னைவிட இம்சை பண்ணுறாங்கள்). கேஜே நீர் ரீ'யையும் 'கோப்பி'யையும் கலந்து ஏதோ ஒரு புதுப் பானம் தயாரிக்கிறீராமே?

கேஜே: ஓமண்ணே, நல்ல சுவை. 'காப்பிப்' பிரியர்களுக்கும் பிடிச்சிருக்கு. 'டீ'ப் பிரியர்களுக்கும் பிடிச்சிருக்கு. ஆரோ ஆடிவேல் எண்டு ஒரு கோணங்கி மட்டும் குறை சொல்லுது.

**************************

இப்போது, தோளில் ஜோல்னாப்பை ,முகத்தில் ஒருவாரத் தாடியுடன் ஒருவர் கடைக்குள் நுளைகிறார். பையை எடுத்து மேசையில் வைக்கிறார். பையில் இருந்து பெயின்ற் பிரஷ்களும் போட்டோக்களும் எட்டிப் பார்க்கின்றன.

ஆள்: திறுவேள், ஒரு தோத்தண்ணி போடும்.

திரு: ஆங் வரணியண்ணே, கனகாலம் இஞ்சால காணல்லை.

வரணி: (உன்ரை தோத்தண்ணியை நான் சகிச்சுக் கொல்லவேணும், பிரகு ஒவ்வொறு நாளும் வறோணூம்) இந்தப் பெயின்ரிங் வேலை கனக்க இருக்குது. பிறகு உலையங்குளத்திலையும் வேலை இருக்குது.

திரு: அண்ணே, ஊரில ஒரு ரீ'க் கடை போட்டீங்களாமே?

வரணி :(சூடாகிறார்) தம்பி, அதைப்பற்றிக் கதைக்கக் கூடாது தெரியுதே? அங்கை பார் 'சும்மா தேநீர்ச்சாலை' ஜயந்தன் வாறார்.

ஜயந்: ஐயா, உங்கடை கடைக்கு இப்படி ஏன் பெயர் வந்தது? தூய தமிழ்பெயர் வைக்கச் சொல்லி ஓடர் வந்ததே?

திரு: சீச் சீ, எனக்குத் தமிழ்ப் பற்று

கனகு: சும்மா கதை அளக்காதேயும். 'தமன்னா டீ ஸ்டால்' என்று பெயர் வைக்க 'மேலிடம்' பெமிசன் தரல்லை. பிறகு கடுப்பில இப்படிப் பேர் வைச்சனீர்.

திரு: (இந்தாள் எப்ப வந்தது? உள் வீட்டு வேலையை எல்லாம் லீக் பண்ணுது) கனகண்ணே ரீ போடட்டுமே? ரீ இருக்கட்டும், 1995 இலே சந்திக் கடையில கொத்துரொட்டி திண்ட உங்கடை சோகக் கதையைச் சொல்லுங்கோ.

கனகு: (இவன் ஆப்பு வைக்கிறான்) சரி சரி அவசர வேலை இருக்குப் பிறகு வரவே?

**************************

கேஜே: அண்ணே, நாங்கள் போய் வரட்டே, ரீ நல்லாக இருந்துது. ஒரு சின்னச் சந்தேகம்.

திரு: சொல்லுங்கோ

கேஜே: நீங்கள் போடுற ரீ'யை உங்கடை பிள்ளையள் குடிப்பாங்களே?

இவ்வளவு நேரமும் கூலாக இருந்த திருவடிவேல் ரென்ஷன் ஆகிறார். விடு விடுவென்று தேநீர் தயாரிக்குமிடத்திற்கு நடந்தார். பெரிய பாத்திரத்திற் தயாரித்து இருந்த தேநீரைக் கவிழ்த்து தொட்டியினுள் ஊற்றினார். "நாளையிலிருந்து கடை பூட்டு" என்று கத்தினார்.

எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு இலையான் பட்டாளம் ஊற்றப்பட்ட தேநீரை மொய்த்தது. தன் முயற்சியிற் சற்றும் தளராத விக்கிரமன்போல் அவற்றை விரட்டத் தொடங்கினார் திருவடிவேல்.

21 comments:

  1. வணக்கம் சகோ!
    கதையை யாரும் படிக்கவில்லை என்று ஏங்கும் நீங்கள் அதை படிக்கும் வண்ணம் பலரிடம் திரட்டியில் இணைத்தால் தானே இன்றய உலகில் பலரும் வாசிக்க முடியும்.நானும் இன்னும் கதை வாசிக்கவில்லை விரைவில் வாசித்து பின்னூட்டம் போடுகின்றேன்.
    அடுத்தகதையை சினிமாத் தியேட்டரில் கானக்காத்திருக்கின்றேன் பதிவு போட்டால் மின்னஞ்சல் போடுங்கள் அவசர உலகில் இழப்பது அதிகம் .

    ReplyDelete
  2. ஒரு ரீஈ இல் இம்புட்டு சங்கதி சொல்லிப்போட்டியள்.

    ReplyDelete
  3. திருவடிவேல் நொந்து நூலாயிட்டார் எண்டு தெரியுது.. எனக்கு கேதீஸ் தம்பியின் நேர்மை தான் பிடிச்சிருக்கண்ணே!

    என்னை "கலாய்க்கிற" தெண்டு நினைச்சுக்கொண்டு பார்த்தா அதிக விழுப்புண்களை தம்பி வாலிபன் தான் வாங்கியிருக்கிறார்!

    Jokes apart, உங்களுடைய உரை நடை கலக்கலோ கலக்கல். அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை வாசம், நீங்கள் அவரை வாசித்தோ/வாசித்திருந்திருக்காவிட்டாலோ கூட அழகாக வந்திருக்கு ...

    நாடகம் ரெண்டு மூண்டு ட்ரை பண்ணுங்க அண்ணா ..

    ReplyDelete
    Replies
    1. திருவடிவேல் நொந்து நூலாயிட்டார், ஆனால் எழுதிய சத்திவேல் உற்சாகமாகத்தான் உள்ளார். பிரிசுரிக்கும்வரை மொக்கை என்றுதான் நினைத்திருந்தேன். இப்பவும் அப்படித்தான் நினைக்கிறேன் :-)

      ஈயோட்டுவதுதான் இதன்(பதிவின்) பிரதான விடயம். அத்தோடு 'வருங்காலத் தமிழ் வாரிசுகள்' தமிழ் வாசிப்பார்களோ என்ற கவலையும். மற்றும்படிக்கு 'நக்கல்/கிண்டல்' அடிக்காவிட்டால் நான் நானில்லை. இதில் உண்மையில் வாங்கிக்கட்டியது திருவடிவேல்தான். வீம்பு, வீண்பிடிவாதம், வாய்க்கொழுப்பு உள்ள பேர்வழிதான் திருவடிவேல்.

      அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை இன்னும் வாசித்ததில்லை. எங்காவது வாங்கலாமா?

      Delete
    2. //என்னை "கலாய்க்கிற" தெண்டு நினைச்சுக்கொண்டு பார்த்தா அதிக விழுப்புண்களை தம்பி வாலிபன் தான் வாங்கியிருக்கிறார்!// அட ஆமா, சந்துக்குள்ள போய் வெளியில வந்த பிறகும் நமக்கு இது புரியல.

      Delete
  4. 'சும்மா ரீ றூம்' எண்டு ஒரு தேநீர்ச்சாலை ஆனைக்கோட்டைக்குக் கிட்ட மானிப்பாய் வீதியில் இருந்தது.
    நல்லா ஈயோட்டியிருக்கிறீங்க

    ReplyDelete
    Replies
    1. அது நான் சயந்தனின் "ஆறாவடு" நாவல் மூலம் அறிந்தது.

      Delete
  5. தோத்தண்ணி ஒண்டு கிடைக்குமோ...!

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம். ஒருநாளைக்கு 8, 9 தோத்தண்ணிதான் விக்கும். இப்ப 9, 10 எண்டு சொல்லலாம்.

      Delete
  6. ஹா ஹா ஹா... ரசிச்சு வாசிச்சன்..இடிச்சு வறுத்த கோப்பிய போல நல்லா இருந்துது..!

    ReplyDelete
    Replies
    1. இப்பதான் கோப்பியும் போடலாமோ எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்... இதுவரை தேத்தண்ணிதான்

      Delete
  7. //இடிச்சு வறுத்த கோப்பிய போல நல்லா இருந்துது.//

    பார்த்தீங்களா அண்ணா ... நீங்க என்ன தான் தேத்தண்ணி எண்டு கூவினாலும் கோப்பி எண்டு பார்த்தா அது கோப்பி தான் அண்ணே!! ஆணியே புடுங்க முடியாது!!!

    ReplyDelete
    Replies
    1. திருவடிவேல் கடையைத் திறக்கலாம் எண்டு யோசித்துக்கொண்டு உள்ளார். ....சுகந்தி ஒரே திட்டு "வாற 3, 4 பேரையும் ரம்பம் போட்டு நிப்பாட்டிப் போட்டியள்' எண்டு

      Delete
  8. யாழ்ப்பாணத்தில எல்லா ஊரிலேயும் ஒரு தேத்தண்ணி கடை இருக்கும் . அதில வம்பழக்கிற ஒரு கூட்டம் ஒரு பிளேன் ரியோட போற வாற கடிச்சு குதரிக்கொண்டு இருப்பினம். ரி குடிக்க ஆசையா இருந்தாலும் உந்த கடிக்கு பயந்து கனபேர் கடைப்பக்கம் போறேல்ல.

    அனுபவிச்சு எழுதியிருகிறாய் மச்சான். நல்ல இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மச்சான். உந்த வழிதெரியாமல் வந்த வாடிகையாளருக்கு அந்த "மொட்டை பிளேட்" காலம் (1991-1995) பற்றி ஒரு குப்பி எடுத்துவிடடாப்பா.

      Delete
  9. அடடா, தோப்பில இது நடந்தது நமக்கு தெரியாதே. செம ரகம். ஈ என்று தொடங்கியதும் மொ.பொ செருகலும் நான் சக்தி அண்ணையின் strength இல ஒரு ஆழ்ந்த கதை எண்டு நினைச்சா, reverse sweep இல கிண்டிக் கிழங்கு எடுத்து இருக்கிறீக, இதில வீளன வலசு, வரணி எண்டு பலரும் 'சூடா' வந்து வான்கியிருக்குறார்கள் - காப்பி? கோப்பி? இல்லை தேத்தண்ணி? பானகம்?... பதநீர்?... எதோ ஒரு இழவு.

    நீங்கள் நிஜமா நல்ல நகைச்சுவை கதைகள் முயலுங்கோ... உங்கள் உரை நடை ஒரு வண்டில் பயணம் மாதிரி சுகம்.

    ReplyDelete
    Replies
    1. இது சும்மா இடைவெளி நிரப்ப எழுதியது. பிறகு பார்த்தால் பரிதாபப்பட்டு 'கொமென்ஸ்' போடுற ஆசாமிகளையே கொஞ்சநாள் இந்தப் பக்கம் காணேல்லை. சூடாகிவிட்டார்கள் என்று நினைத்தேன்.

      Delete
  10. ரீ, ஈ, பதிவைப் பார்த்து இளித்துக் கொண்டேயிருக்கிறேன்.
    அதுசரி "நீங்கள் போடுற ரீ'யை உங்கடை பிள்ளையள் குடிப்பாங்களே?" என்று மனைவியைக் கேட்டால் என்னாகும்.

    ReplyDelete
    Replies
    1. அந்தளவுக்குத் திருவடிவேலுக்குத் துணிச்சல் இல்லைங்கோ. அவர் வீட்டுக்கு அடக்கமான கணவன் :-). வெளியிலைதான் வண்டவாளமெல்லாம்.

      Delete