Wednesday, May 25, 2011

புல்லாங்குழல்

எண்பதுகளின் இறுதியில் வந்த தமிழ் சினிமாப் பாட்டுக்களைக் கேட்டிருப்பீர்களாயின், ஒன்றைத் தவறவிட்டிருக்க மாட்டீர்கள். அநேகமாகப் பாட்டின் ஏதாவது ஓரிடத்தில் "கூக்கூ குக்குக் கூ" என்று ஒரு வரி இருக்கும். இதைச் சிலவேளை ஒரு பெண்குரல் பாடும், அல்லது அநேகமாக ஒரு புல்லாங்குழல் ஊதும்.

இப்படித் தமிழ் சினிமாப் பாடல்களில் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த புல்லாங்குழல், மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. மனிதன் முதல்முதலிற் பாவிதத இசை உபகரணம் இதுதான் என நம்பப்படுகிறது. ஜேர்மனியில் எங்கோ ஒரு குகையிற் கண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல் கிட்டத்தட்ட 35,000 வருடங்களுக்கு முன் செய்யப்பட்டது என்று அறிஞர்கள் அடித்துக் கூறுகிறார்கள். ஐந்து துளைகளைக் கொண்ட இந்தப் புல்லாங்குழல் வல்லூறு ஒன்றின் சிறகு எலும்பிலிருந்து செய்யப்பட்டது.

இன்று இந்தியாவில் பாவிக்கப்படும் புல்லாங்குழல்கள் மூங்கிலினால் ஆனவை என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும். தென்னிந்திய கர்நாடக சங்கீதத்தில் பாவிக்கப்படுவது எட்டுத் விரல்-துளைகளைக கொண்டது. வட இந்தியாவில் ஹிந்துஸ்தானி இசையிற் பாவிக்கப்படுவது சற்று நீளமானதாய் இருந்தாலும் ஆறு விரல்-துளைகளை கொண்டது. மேற்கத்தைய புல்லாங்குழல்கள் பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்படுபவை. மூங்கில் புல்லாங்குழலுடன் ஒப்பிட்டால் செய்முறை/அமைப்பு என்பன மிகச் சிக்கலானவை.

கிழக்கோ மேற்கோ ஒன்று பிடித்தால் மற்றது பிடிக்கும். இப்போது புல்லாங்குழலால் உலகப்புகழ் அடைந்தவர்கள், இல்லாவிட்டால் புல்லாங்குழலை உலகப் பிரபலமாக்கியவர்களில் ஒரு சிலர்.

(1) சேர் ஜேம்ஸ் கால்வே (Sir James Galway )

"The Lord of the Rings" ஆங்கிலப் படத்தில் வந்த ' உருகி ஓடும் தங்க ஓடை' போன்ற இசையைத் தந்தவர். பார்க்கவும், இவர் இரண்டு விதமான புல்லாங்குழல்களைக் கையாள்கிறார். ஒன்று நாதஸ்வரம் போன்று நேரே பிடித்து ஊதுவது (block flute or recorder). மற்றது நாம் எல்லாருமறிந்த பக்கவாட்டில் பிடித்து ஊதுவது.



(2) ஜோஹ்ன் பியர் ரம்பால் (Jean-Pierre Rampal 1922 -2000)

புல்லாங்குழலில் 'தனி ஆவர்த்தனம்' வாசிக்கலாம் என்று மேற்குலகிற்கு நிரூபித்தவர். அதற்கு முன், புல்லாங்குழல் பத்தோடு பதினொன்றாக குழு இசையில் வாசிக்கப்பட்டது.

Jean-Pierre Rampal plays Mozart

(3) ஷஷாங் சுப்பிரமணியம் (Shashank Subramanyam) மிக இளம் வயதிலேயே அதீதத் திறமையை வெளிப்படுத்தியவர். இவரின் "REMINISCENCE OF BRINDAVAN" இறுவட்டு எனக்கு மிகவும் பிடித்தது. கீழே உள்ளது வேறு ஒன்று. அவரின் இளங்கன்று போன்ற துள்ளல் நடை கவனிக்கத்தக்கது.



(4)Dr என்.ரமணி. இவரின் இறுவட்டு எதுவாகிலும் கண்ணை மூடிக்கொண்டு வாங்குவேன். இன்று வரை ஏமாற்றமடைந்ததில்லை. டி.ஆர்.மகாலிங்கத்திற்குப் பிறகு, அவர் பாணியிலே சில புதுமைகளைப் புகுத்தி கர்னாடக புல்லாங்குழலிசைக்குப் புத்துயிர் கொடுத்தவர்.



(5)இமானுவல் பயூட் (Emmanuel Pahud). பிறந்தது ஜெனீவா வில். வசிப்பது பெர்லினில். இவர் புல்லாங்குழல் பழகியிருக்காவிட்டால், ஹொலிவூட்டிற்கு நடிக்கப் போயிருக்கலாம்! ஆசாமி அவ்வளவு அழகாக இருக்கிறார்.



----
உசாத்துணை:

(1) http://www.britannica.com/
(2) Wikipedia

7 comments:

  1. புல்லாங்குழல் தொடர்பான பல தகவல்களை, இதுவரை நான் அறிந்திராத புதிய தகவல்களை உங்கள் பதிவின் வாயிலாக அறிந்தேன் சகோ. பகிர்விற்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. மிகவும் அருமை பல விடயங்களை காதுக்கினிமையுடன் ரசித்தேனுங்க...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

    ReplyDelete
  3. நன்றி, நிரூபன் , சார்வாகன் , மற்றும் ம.தி.சுதா :-)

    ReplyDelete
  4. புல்லாங்குழல் பற்றி நல்ல தகவல்கள். நன்றி ...

    ReplyDelete
  5. @கணேஷ் நன்றி தலைவா :-)

    ReplyDelete