Sunday, December 25, 2011

பி. ஜெயச்சந்திரன் - திருவாளர் underestimated

எனக்கும் பொதுத் திரையிசை இரசனைக்கும் கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் உண்டு. அநேகருக்கும் பிடித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவ்வளவாகப் பிடிப்பதில்லை, அவர் மிக இளைஞனாக இருந்தபோது பாடிய ஒருசில பாட்டுக்கள் விதிவிலக்கு. ஜேசுதாஸ் ஏறக்குறையப் பிடிக்காது எனலாம். ஜேசுதாஸ் பாட்டுக் கேட்டால் ஏதோ ஒரு ஆஸ்பத்திரி வார்ட்டில் படுத்திருக்கிறமாதிரி இருக்கிறது. இப்படிச் சொல்லிவிட்டு அரும்பொட்டில் அடிவாங்காமல் தப்பிய அனுபவங்கள் உண்டு. இப்பவும் தீவிர ஜேசுதாஸ் ரசிகர்கள் கண்ட இடத்தில் உதைக்கும் 'ஃபத்வா' வெளியிடலாம். அதுபோகட்டும், எனக்கும் சில ஜேசுதாஸ் பாடல்கள் ஆவது பிடிக்கும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகுதான் அந்தப் பாடல்களைப் பாடியது ஜேசுதாஸ் அல்ல, இன்னொரு மலையாளியான பி.ஜெயச்சந்திரன் என்று தெரியவந்தது.

முதலாவது, ஒருகாலத்தில் சக்கைபோடுபோட்ட, "வசந்தகால நதிகளிலே..."




அடுத்தது, ஒரு காலத்தில் கலக்கிய "ஒரு வானவில் போலே..."




இதுவரை ஒரு தேசியவிருதும் (இந்தியா), நான்கு கேரள மாநில விருதுகளும், நான்கு தமிழ்நாட்டு மாநில விருதுகளும் பெற்றுள்ளார். இப்படி விருதுகள் வாங்கினாலும் அவர் அவருக்குரிய இடத்தைப் பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.


பின்னே, எனக்குப் பிடித்த இன்னும் இரண்டு பாடல்கள்.

பொன்னென்ன பூவென்ன கண்ணே...
(Disclaimer: இப்படிப் பாடினாலும் நகை பட்ஜெட்டில் கைவைக்க முடியாது)



சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்...



24 comments:

  1. /அநேகருக்கும் பிடித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவ்வளவாகப் பிடிப்பதில்லை, அவர் மிக இளைஞராக இருந்தபோது பாடிய ஒருசில பாட்டுக்கள் விதிவிலக்கு./
    என் கேஸ் போல ;-)

    ReplyDelete
  2. எனக்கும் ஜெயச்சந்திரன் மிகப்பிடிக்கும்!

    ReplyDelete
  3. ஆம் இனிய பாடல்கள்தான். மறக்க முடியாதவை.

    ReplyDelete
  4. நன்றிகள் Dr. M.K. Muruganandan , & yo.karnan.

    ReplyDelete
  5. நன்றி சக்திவேல். கன காலத்துக்கு பிறகு மீண்டும் இந்த பாடல்களை கேட்கிறேன்.

    நான் எந்த பாடகர் என்று இல்லாமல் நல்ல பாடல்கள் எல்லாவற்றையும் ரசிப்பேன். காதுக்கு இனிமையாக இருக்கும் பாடல்களை கூட , படங்களில் பாடல் காட்சிகளில் பார்க்கும்போது தாங்க முடிவதில்லை.
    பாடல்களை , சினிமாக்களில் இடையில் செருகி அவற்றைக் கெடுக்காமல் விடுவதே நல்லது.

    ReplyDelete
  6. ஆம் @அந்தக்காலம், பாடல் காட்சிகள் (நடனங்கள்?) அநேகமாகத் திருஷ்டிக் கழிவுகள் போலத்தான் - அந்தக்காலப் பாடல்கள் என்றால் என்ன, இந்தக்காலப் பாடல்கள் என்றால் என்ன.

    ReplyDelete
  7. நீங்கள் தந்த பாடல்களை நானும் ரசிப்பேன்...

    ஆனால் என்னிடம் ஒரு பழக்கம் இருக்கிறது நடிகர்களை வகைப்பிரிப்பது போல பாடகர்களை என்னால் பிரிக்க முடிவதில்லை யாருடைய பாட்டு ரசிக்கக் கூடியதாக இருந்தாலும் ரசிப்பேன்...

    ReplyDelete
  8. நன்றி மதி. நானும் முன்பு அப்படித்தான், அதனால்தான் மேலுள்ளவை எல்லாம் ஜேசுதாஸ் பாடியது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

    ReplyDelete
  9. வசந்த கால நதிகளிலே..... என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது! இசையிலும் பார்க்க, அதன் வரிகள் தான் அதற்குக் காரணம் என எண்ணுகின்றேன்!

    ReplyDelete
  10. @புங்கையூரன் , வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள். எனக்கு வரிகளை விட ஜெயச்சந்திரனின் குரலும், அத்தோடு இப்பாட்டுக் காவிக்கொண்டுவரும் என் பால்ய காலமும்தான் அதிகம் கவர்கின்றன. ஒவ்வொருவரின் ரசனையும் ஒவ்வொரு மாதிரியல்லவா :-)?.

    நீங்கள் கவிபாடக் கூடியவர் என்பதால் இன்னொரு கோணத்திற் பார்த்திருப்பீர்கள். நானும் முயற்சிக்கின்றேன். பயப்பட வேண்டாம்- கவிபாடவல்ல. வரிகளைப் புரிந்துகொள்ள.

    ReplyDelete
  11. நல்லபல பாடல்களை மீண்டும் அசைபோடவைத்ததற்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. ஜெயச்சந்திரன் underestimated என்பதை என் அளவில் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவரை உண்மையான இசையமைப்பாளர்கள் நன்றாகவே கொண்டாடினார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் என்ன ஒன்று, யேசுதாஸ் ஏற்கனவே பாடிக்கொண்டு இருந்ததால் அவர் பாணி குரல் மீண்டும் எதற்கு என்ற கேள்வி எழுந்தது. மனோவுக்கு ஏற்பட்ட நிலைமை தான்.

    காதல் மயக்கம், இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ போன்ற பாடல்களும் பிடிக்கும்

    ReplyDelete
  13. நன்றிகள் அம்பலத்தார் & ஜேகே.

    @ஜேகே, ஜேசுதாஸ் பற்றி நிறைய வாதங்கள், எதிர் வாதங்கள் உள்ளன. என்றாலும் எல்லாப் பாடல்களையும் ஒருவித சோகத்துடன் பாடுவதை என்னால் ரசிக்க முடிந்ததில்லை. ஜெயச்சந்திரன் இன்னும் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவர் என்பது என் கருத்து

    ReplyDelete
  14. எனக்கும் பிடித்த பாடல்கள் உங்களுக்கும் பிடிச்சிருப்பது சந்தோசம்..!!!

    ஆனா சினிமா பாட்டுக்களை விட சில பாட்டுக்கள் என்னை இன்னும் வசீகரிக்கும் உதாரணமா அழகான அந்த பனை மரம் மற்றும் தமிழா நீ பேசுவது தமிழா போன்றவை..

    ReplyDelete
  15. சிறந்த பாடல்கள் பாராட்டுகள்

    ReplyDelete
  16. தாங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் அனைத்தும்
    என் மனமும் தொட்டவை
    கேட்டு மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. ஜெசுதாஸ் பாடலை பற்றி முக்கியமாக உச்சரிப்பை பற்றி சாத்திடம் சொல்லி வாங்கிகட்டியது ஞாபகம் வருகிறது.

    Nitku

    ReplyDelete
  18. நன்றிகள் @காட்டான், @மாலதி, @Ramani, and Nitku.


    @Nitku

    இப்பகூட 'சாத்' பிளேன் பிடித்து வந்து உதைக்குமோ என்று பயமாக உள்ளது.

    ReplyDelete
  19. எஸ். ரஞ்சகுமார்January 4, 2012 at 7:49 PM

    கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்று மிகுந்த பாண்டித்தியம் கொண்டவர்கள் சினிமா சங்கீதத்திற்கு தேவையான வெகுஜன இரசனையுடன் சமரசம் செய்து கொள்வதில் சிக்கலை எதிர்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஜேசுதாசுக்கு மட்டுமல்ல வாணி ஜெயராம், சீர்காழி கோவிந்தராஜன்,பாலமுரளி கிருஷ்ணா, உன்னி கிருஷ்ணன் போன்றவர்களுக்கும் இதே சிக்கல் இருந்தது. தமிழில் மட்டுமல்ல ஏனைய இந்திய மொழிகளிலும் பெரும் புகழும், ரசிகர் கூட்டமும் கொண்டவர்கள் சாஸ்திரிய சங்கீதத்தில் பெரும் பாண்டித்தியமும் முதன்மையும் கொண்டவர்கள் அல்ல. ஆனால் அதில் நல்ல ஞானமும் பயிற்சியும் கொண்டவர்கள். டி.எம்.எஸ், எஸ்பிபி, மொஹம்மட் ராபி, கிஷோர்குமார், எ.எம்.ராஜா, பி.பி.சிறீநிவாஸ், பி.சுசீலா, எஸ். ஜானகி என்று இந்தப் பட்டியல் நீளும். கொஞ்சமும் சாஸ்திரிய சங்கீத அறிவு அற்ற டி. ராஜேந்தர் கூட ஒரு சில மனது மறக்காத பாடல்களைத் தந்திருக்கிறார். சினிமா சங்கீதத்துக்கான அடிப்படை வெகுஜன இரசனையை புரிந்து கொண்டு சமரசம் செய்தல். இதன் அர்த்தம் சினிமா சங்கீதம் மட்டமானது என்பது அல்ல. சாஸ்திரிய சங்கீத்தில் மிக உச்சம் பெற்றவர்கள் மேடைகளில் கச்சேரி செய்வதையே விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அது பெரிய உபாசனை... தன்னுள் இசை கட்டற்றுப் பெருகுவதை உணர்வது பெரிய அனுபவம்.

    ஜெயச்சந்திரன் நல்ல பாடகர் மட்டுமல்ல மலையாளத்தின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். கலைத்துவ முழுமை கொண்ட சில திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். நிலவொளி வீசும் வானத்தில் நட்சத்திர மினுமினுப்பாக தமிழில் அவர் இருந்திருக்கிறார். அவரைப் போல மேலும் சிலரைக் குறிப்பிடலாம். குறிப்பாக சந்திரபோஸ்.. சுவர்ணலதா..

    ReplyDelete
  20. நன்றிகள் எஸ். ரஞ்சகுமார். மதுரை சோமு "மருதமலை மாமணியே ..." பாடியபோது "சினிமாப் பாட்டுப் பாடுகிறார்" என்று எதிர்த்தவர்களும் உண்டு -என்பதுவும் ஞாபகத்திற்கு வந்து போகிறது.

    ReplyDelete
  21. ஜேசுதாஸ் ,எஸ்.பி.பாலசுப்ரமணியம்.ஜெயச்சந்திரன். - இவர்களின் பாடல்களை நன்றாக
    உன்னிப்பாகக் கேட்டால் நன்கு புரியும் ,இப்போது உள்ள பாடகர்கள் ஒரு பாடலை பாடிவிட்டு தான் ஒரு பெரிய மேதையைப்போல
    கட்டிக்கொள்வார்கள்
    ஆனால் ஜேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்ரமணியம்,ஜெயச்சந்திரன்,ஆகியோர்
    இன்னும் தலைக்கனம் இல்லாமல் சிம்பிளாக
    இருக்கிறார்கள்
    இவர்களுக்குத்தான் அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள் ,வானொலியிலும் இவர்களுடைய பாடல்கள்தான் அதிகமாக நேயர்கள் விரும்பிக் கேட்பதுண்டு .இப்போது உள்ள பாடகர்கள் படுகிரர்களா அல்லது கத்துகிறார்களா
    ? ஜேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ,ஜெயச்சந்திரன் குரலுக்கு ஈடாக இனி எங்கே இனிய குரல் ?
    பாஸ்கர்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பாஸ்கர். எனக்கு இந்த மூவரில், ஜெயச்சந்திரன்தான் அதிகம் பிடிக்கும். என்றாலும் நீங்கள் கூறியது நல்ல ஒரு சிந்தனை. High Pitch என்ற பெயரில் நிறையப்பேர் இப்ப கத்துகிறார்கள்.

      Delete
  22. ஜேசுதாஸ் ,எஸ்.பி.பாலசுப்ரமணியம்.ஜெயச்சந்திரன். - இவர்களின் பாடல்களை நன்றாக
    உன்னிப்பாகக் கேட்டால் நன்கு புரியும் ,இப்போது உள்ள பாடகர்கள் ஒரு பாடலை பாடிவிட்டு தான் ஒரு பெரிய மேதையைப்போல
    கட்டிக்கொள்வார்கள்
    ஆனால் ஜேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்ரமணியம்,ஜெயச்சந்திரன்,ஆகியோர்
    இன்னும் தலைக்கனம் இல்லாமல் சிம்பிளாக
    இருக்கிறார்கள்
    இவர்களுக்குத்தான் அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள் ,வானொலியிலும் இவர்களுடைய பாடல்கள்தான் அதிகமாக நேயர்கள் விரும்பிக் கேட்பதுண்டு .இப்போது உள்ள பாடகர்கள் படுகிரர்களா அல்லது கத்துகிறார்களா
    ? ஜேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ,ஜெயச்சந்திரன் குரலுக்கு ஈடாக இனி எங்கே இனிய குரல் ?
    பாஸ்கர்

    ReplyDelete